ஐக்கிய நாடுகள் அமைப்பின் வருடாந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த வெளிநாடுகளின் தலைவர்கள் பலரும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு பாராட்டுத் தெரிவித்தள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு வருகை தந்த சகல வெளிநாட்டு தலைவர்களுக்கும் ஜனாதிபதி இலங்கையின் தற்போதைய நிலை குறித்து ஆதாரபூர்வமாக விளக்கிக் கூறினார்.ஈரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாத் நேபாள பிரதமர் கலாநிதி பாபுராம் பற்றாய் கொலம்பிய ஜனாதிபதி ஜூவான் மெனுவால் சென்வோஸ் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பலதரப்பட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
வெளிநாட்டு தலைவர்கள் இலங்கையினை தற்போது சீரான முறையில் நிர்வகித்து வருகின்றமை தொடர்பாகவும் நாட்டுப் பிரச்சினைகளை துரித வேகத்தில் தீர்த்து வருவதற்கு காட்டி வரும் ஆர்வம் குறித்தும் தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
ஐ.நா. சபையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையூம் சந்தித்து உரையாடியமை குறிப்பிடத்தக்கது
