புதன், 21 செப்டம்பர், 2011

கிளின்டன் ஜனாதிபதியை கட்டித் தழுவி வரவேற்பு! இருவருக்கும் இடையில் விஷேட பேச்சுவார்த்தை

நியூ யோர்க்கில் நடைபெறும் ஐ.நா.மாநாட்டில் பங்குபற்றச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் கட்டித் தழுவி வரவெற்றார்.

நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றது.இந்தச் சந்திப்பின் போது எவ்வாறான விடயங்கள் குறித்து பேசப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. மனித உரிமை மீறல் மீள் குடியேற்றம் மற்றும் நிலக்கண்ணி வெடி அகழ்வு போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.

சர்வதேச ரீதியிலான சவால்களை எதிர்நோக்குவதற்கு உலகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் கிளின்டன் க்ளோபல் இனிடேடிவ் போரம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளதுடன் அமைப்பின் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.