ஐக்கிய நாடுகள் சபையின் 66ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று உரை நிகழ்த்தவுள்ளார்.
கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்றைய நிகழ்வுகள் நியூயோர்க் நேரப்படி காலை 10.30 அளவில் ஆரம்பமாகவுள்ளன.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டு அவ்வறிக்கை மனித உரிமை பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் இன்றைய உரை மிக முக்கியம் வாய்ந்ததாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி நியூயோர்க்கில் வைத்து வெளிநாட்டுத் தலைவர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கட்டார் நாட்டுத் தலைவர், உகண்டா உப ஜனாதிபதி மற்றும் பாலஸ்தீன தலைவர் ஆகியோரை ஜனாதிபதி நேற்று சந்தித்துள்ளார்.
