புதன், 14 செப்டம்பர், 2011

நாட்டை பாதாள உலகக் குழு ஆளும் நிலைமை ஏற்பட்டுள்ளது- டி.யூ.குணசேகர

நாட்டை இன்று பாதாள உலகக் குழு ஆளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க சிரேஸ்ட அமைச்சர் டி.யூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் பாராளுமன்றிலிருந்து கீழ் மட்டம் வரையில் ஊழல்கள் அதிகரித்துச் செல்வதாக அமைச்சர் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-

"விசேடமாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எச்சரிக்கை, அழுத்தம், அவதூறு ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் இது முக்கியம் வாய்ந்த தேர்தல்.

இன்று அரசியல் ஒழுக்கம் வீழச்சியைக் கண்டுள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. திறந்த பொருளாதாரம், அரசியல் யாப்பு, யுத்தம், யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகள் இவ்வாறு பல காரணங்கள் உள்ளன.

எமது நிர்வாகத்திற்கு வெளியில் இருந்துவரும் குறைப்பாடுகள் காரணமாக நாட்டில் அரசியல் கலாசாரம் சீர்குலைந்துள்ளது. இன்று பாதாள உலகக் குழு அரசாட்சி செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதாள உலகிற்கு அரசியல் தள்ளப்படுகிறது.

அரசியல் அதிகாரத்திற்காக கதவு தட்டப்படுகிறது. கட்சி மாறுகின்றனர். ஆளும், எதிர்கட்சிகளுக்குள் சுற்றித் திரிகின்றனர். இவ்வாறான நிலை காணப்படும்போது பாராளுமன்றிலிருந்து கீழ்மட்டம்வரை எல்லா இடங்களிலும் ஊழல், அநியாயம், லஞ்சம் அதிகரித்துள்ளது. அதனால் வரும் தேர்தலில் மற்றுமொரு முக்கிய செயலாற்ற வேண்டியுள்ளது." என்றார் சிரேஸ்ட அமைச்சர் டி.யூ.குணசேகர.