வடக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையிலும் உலர்ந்த கடல் வெள்ளரிகளை கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்ட நான்கு சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வடக்கு கோவிலம் கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் இவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 20 பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட 996 கிலோ கிராம் உலர்ந்த கடல் வெள்ளரிகளை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தக் உலர்ந்த கடல் வெள்ளரிகள் இந்தியர்களின் உதவியுடன் ஆழ்கடல் பகுதியில் வைத்து மீன்பிடி படகொன்றுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கடற்படையினர் அதனை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்துள்ளனர்.
