வெள்ளி, 4 நவம்பர், 2011

உங்கள் டான் யாழ்.ஒளியில் இன்று வெள்ளிக்கிழமை(04-11-2011)இடம் பெ றும் பார்வைகள்.

இவ்வார (04-11-2011) பார்வைகள் நிகழ்ச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் அவர்கள் கனடாவில் ஆற்றிய உரை ஒன்றில் வடக்கு கிழக்கு தமிழர்க்கு சொந்தமானது என்று தான் கூறவரவில்லை என்று கூறியது சம்பந்தமாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு விஜயம் சம்பந்தமாகவும் எமது பார்வைகள் நிகழ்ச்சியின் நேயர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து கருத்துக் கேட்கப்படவிருக்கின்றது.

parvaigal எனும் skype முகவரிக்கு நேரடியாக அழைப்பதன் மூலமாகவோ அல்லது http://www.facebook.com/groups/parvaigal/ எனும் குழுமத்தில் இணைந்து உங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் பதிவதன் மூலமாகவோ நீங்களும் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளலாம். நீங்கள் பதியும் கருத்துக்கள் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்படும்.

தொலைபேசியூடாக உங்கள் கருத்துக்களை நேரலையில் பதிவுசெய்ய வெள்ளிக்கிழமை (04-11-2011) இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் நீங்கள் அழைக்கலாம். (ஐரோப்பிய நேரம் 6.30 முதல் 8.30 வரை )இலங்கையில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம் +94112667966