வியாழன், 3 நவம்பர், 2011

யாழ். சிந்தனைக்கூடம் எனும் உள்ளூராட்சி முறைமை பற்றிய அறிவூட்டல் செயலமர்வு

யாழ். சிந்தனைக்கூடம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனமும், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான இயக்கமும் இணைந்து உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கு உள்ளூராட்சி முறைமை பற்றிய அறிவூட்டல் செயலமர்வு ஒன்றினை யாழில் நடத்தவுள்ளனர்.

நாளை 04ஆம் திகதியும், சனிக்கிழமை 05ஆம் திகதியும் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலையத்தில் முழுநாள் செயலமர்கள் இரு நாட்களும் நடைபெறவுள்ளன.

இச் செயலமர்வு கட்சிபேதமின்றி பிரதேச அபிவிருத்தியையே இலக்காகக் கொண்டு நடத்தப்படவுள்ளது.

இச் செயலமர்விற்கு நகர சபை, பிரதேச சபைகளின் தலைவர், துணைத்தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் என மூவர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ், சிங்கள புலமையாளர்கள் வளவாளர்களாகக் கலந்து கொள்ளும் இச் செயலமர்வு தமிழ்மொழியில் இடம்பெறவுள்ளது.

இதில் வடமாகாண ஆளுநரின் முன்னாள் செயலாளர் எஸ்.ரங்கராஜன், யாழ் மாநகரசபை ஆணையாளர், பேராசிரியர் இரா.சிவசந்திரன், பேராசிரியர் எஸ்.கே.சிற்றம்பலம், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தைச் சேர்ந்த சிறியானி விஜயசுந்தரா, சட்டத்தரணி சுதர்சன குணவர்த்தனா, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.