வெள்ளி, 2 டிசம்பர், 2011

யாழ். குடாநாட்டில் நான்கு நாட்களுக்குள் 2 1/2 கோடி ரூபா சம்பாதித்த இலங்கை மின்சார சபை

கடந்த நவம்பர் மாதம் யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இலங்கை மின்சார சபைக்கு 2 1/2 கோடி ரூபா லாபம் கிட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை மின்சார சபை சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை மின்சார சபை அவசர சோதனை பிரிவு அதிகாரிகளால் கடந்த நவம்பர் 26, 27, 28 மற்றும் 29ம் திகதிகளில் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 23,677,063.00 ரூபா லாபம் கிடைத்துள்ளது.

இதில் 1,260,000.00 ரூபா வழக்குத் தாக்கல் செய்ததன் மூலமும் 22,417,063.00 ரூபா மின்சார சபைக்கு சேதம் விளைவித்த தொகையாகவும் கிடைக்கப்பெற்றுள்ளது.

மீற்றர் மானியை மாற்றி மின்சாரம் பெற்றமை உள்ளிட்டவை தொடர்பில் 126 முறைப்பாடுகள் பதிவாகின.

இலங்கை மின்சார சபை நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையால் கடந்த செப்டெம்பர் மாதம் 30 மில்லியன் ரூபாவும், ஒக்டோபர் மாதத்தில் 18 மில்லியன் ரூபாவும் லாபமாகப் பெறப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெறுபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடன் அழைக்கவும். தொ.இ 011-2422259.

இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.