டான் யாழ்.ஒளியில் வெள்ளிக்கிழமை (10-02-2012) இடம்பெறும் பார்வைகள் நிகழ்ச்சியில் திம்புப் பேச்சுவார்த்தை தொடக்கம் இன்றுவரை தீர்க்க முடியாத கோரிக்கைகளையே தமிழ்த் தரப்பு முன்வைப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக டான் தொலைக்காட்சி நேயர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து கருத்துக் கேட்கப்படவிருக்கின்றது.
parvaigal எனும் skype முகவரிக்கு நேரடியாக அழைப்பதன் மூலமாகவோ அல்லது http://www.facebook.com/groups/parvaigal/ எனும் குழுமத்தில் இணைந்து உங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் பதிவதன் மூலமாகவோ நீங்களும் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளலாம். நீங்கள் பதியும் கருத்துக்கள் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்படும். தொலைபேசியூடாக உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் 12.00 மணி வரை நீங்கள் அழைக்கலாம். (ஐரோப்பிய நேரம் 5.30 முதல் 7.30 வரை )இலங்கையில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0094112667977. இலங்கையில் நேரடியாக நடைபெறும் பார்வைகள் நேரலை நிகழ்ச்சியை பார்வையிட விரும்புபவர்கள் ஐரோப்பிய நேரம் மாலை 5.30 மணிக்கு டான் தொலைக்காட்சியின் இணையத்தளத்தில் Live From Colombo என்ற பகுதியை அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம்.link : http://www.dantv.tv/index.php?option=com_content&view=article&id=418:dan-tamil-oli-sl&catid=100:live-tv&Itemid=565
