இலங்கையின் 64வது சுதந்திர தினம் மற்றும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்காக 8,000க்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சுதந்திர தினத்தன்று இடம்பெறும் பொலிஸ் வாகன தொடரணிக்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வுகள் இடம்பெறும் பிரதேசத்தில் அதிவேகமாக வாகனங்கள் செலுத்துபவர்ககள் மற்றும் சட்ட விதிகளை மீறி வாகனங்கள் செலுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
