நட்டமடைந்துள்ள தனியார் நிறுவனங்களை அரசு மயப்படுத்தும் சட்டம் அரசியல் அமைப்புக்கு மாறானதென தீர்ப்பளிக்கும்படி தாக்கல் செய்யப்பட்ட மனுமொன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
நிஹால் ஸ்ரீ அமரசேகர என்பவரால் குறித்த மனுவை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த சட்டம் செயற்படுத்தப்பட்டால் நாட்டு மக்களின் உரிமை மீறப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு அமுலில் இருப்பதால் அது குறித்து விவாதிக்க முடியாது என சட்ட மா அதிபர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது நிராகரித்துள்ளது.
