புதன், 8 பிப்ரவரி, 2012

மீனவர்களை விடுவிக்க இராஜதந்திர வழிமுறை உதவாது

சோமாலிய கடற் கொள்ளையர்கள் பிடியில் உள்ள 6 இலங்கை மீனவர்களை விடுவிக்க இராஜதந்திர வழிமுறைகளை கையாள முடியாது என மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னிணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இன்று (08) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத்தியஸ்த்த நபர் ஒருவரை அனுப்பி இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் இவ்வாறு செயற்பட்டு சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிடியில் இருந்த இலங்கை மீனவர்களை விடுவித்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.