கொழும்பிலிருந்து பிரதான ஆறு நகரங்களுக்கு சொகுசு பஸ் சேவையினை நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் மைக்ரோ கார் லிமிடட் நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள புதிய எட்டு பஸ்கள் வெகு விரைவில் இச்சேவையில் ஈடுபடுப்பத்தப்படும் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மற்றும் கால விரயம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இப்புதிய பஸ்சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கொழும்பு மொறட்டுவை, கொழும்பு ஹோமாகம நகரங்களுக்கிடையில் இரு சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது. அது வெற்றியளித்ததை தொடர்ந்தே மேலும் எட்டு பஸ்கள் இச் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொறட்டுவை கோட்டை, கெஸ்வ கோட்டை, நீர்கொழும்பு கோட்டை, கம்பஹா கோட்டை, கடுவல கோட்டை (மாலபே ஊடா), மற்றும் ஹோமாகம கோட்டை ஆகிய ஆறு பிரதான நகரங்களுக்கே இந்த சொகுசு பஸ் சேவை நடாத்தப்படவுள்ளது.
இந்த நடைமுறை எமது நாட்டிற்கு புதியதாக இருப்பினும் சிங்கப்பூர், இந்தியா, தாய்லாந்து மற்றும் மலேசியா உள்ளிட்ட அனேக நாடுகளில் நடைமுறையில் உள்ளது எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
