புதன், 21 மார்ச், 2012

மன்னாரில் 148 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு

இலங்கை பொலிஸ் நிலையத்தின் 148 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று மன்னார் பொலிஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது.

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஷார தலுவத்த தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட பொலிஸ் அதிகாரி லக்ஸ்ரீ விஜயசேன கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக ,மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டி மேல், மன்னார் மாவட்ட உதவிச்செயலாளர் பரமதாஸ், மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியாம்,மதகுருக்கள்,மற்றும் மன்னாரில் பொலிஸ் சேவையில் இணைந்த வீரர்கள் மற்றும் உயிரிழந்த வீரர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது உயிர் நீத்த பொலிஸ் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு மன்னாரைச் சேர்ந்த உயிரிழந்த பொலிஸ் வீரர்களின் குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. மன்னாரைச் சேர்ந்த 3 பொலிஸார் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.