சனி, 17 மார்ச், 2012

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டில் பிரதி அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வுக்கு விசேட அதிதியாக அழைப்பு.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை (18.3.2012) மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் அக் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திர காந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.இத் தேசிய மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதே வேளை இத் தேசிய மாநாட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கலந்துகொள்வதுடன், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விசேட அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் கட்சியின் தெடண்டர்கள் வெளிநாட்டுத் தூதுவர்கள் மதப்பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

(பிரதி அமைச்சரின் ஊடக பிரிவு)

Deputy Minister Media Unit.
Ministry of Child Development & Women's Affairs
Tel: 011-2826449, 011-2826450, 011-3818181
Fax: 011-2826452