இந்திய பாராளுமன்ற வரவு - செலவுக் கூட்டத்தொடரில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.கட்சி கூச்சல் மற்றும் குழப்பத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜனாதிபதி உரையில், இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக மீனவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுவதில்லை. அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி உரையில் இடம்பெறவில்லை என தி.மு.க.வினர் கூச்சல் போட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
