வெள்ளி, 27 ஜூலை, 2012

நல்லூர் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருடியவர்களுக்கு விளக்கமறியல்

கடந்த 24ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள நல்லூர் திருவிழாவில் நான்கு தங்க சங்கிலிகளை திருடியவர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதி நல்லூர் கொடியேற்ற திருவிழாவின் போது நான்கு தங்கச் சங்கிலிகள் காணாமற் போயுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திருட்டு தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது இவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.