தேசிய அரசியலுக்குள் ஊடுருவியுள்ள பிரிவினைவாத சக்திகள், இன்று கிழக்கு மாகாணத்தில் புலிகளின் ஆக்கிரமிப்பு போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் விரட்டிவிட்டு தமிழர்கள் மாத்திரம் கிழக்கில் வாழமுயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் ௭ன்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மன்னார் விடயத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும். அரசாங்கம் நியாயமான முறையில் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் பிரிவினைவாத சக்திகளின் உள்நோக்கங்கள் கிழக்கில் அரங்கேறி விடும் ௭னவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்; மன்னார் நீதிபதியை அச்சுறுத்தியதாக பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. உண்மையில் நீதிதுறை மீது அச்சுறுத்தல்களை விடுப்பதனை அனுமதிக்க முடியாது. அதேபோன்று மன்னார் முஸ்லிம் மீனவர்களுக்கும் நீதி வழங்க வேண்டும். கிழக்கில் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் குடியேற்றங்களை தடுக்கும் வகையிலான பாரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
முன்பு புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளின் ஊடாக வடக்கு, கிழக்கு பகுதி காணிகளை ஆக்கிரமித்தனர். இதே போன்றதொரு நிலையே கிழக்கிலும் உதயமாகின்றது ௭ன்றார்.