கல்முனை பிரதேசத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமான முறையில் பசு மாடுகளை அறுத்த ஆறு பேர் இன்று 31ம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மூன்று பசு மாடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கல்முனை பிரதேசத்தில் இறைச்சி வெட்டும் மடுவம் பகுதிக்கு சம்பவதினமான இன்று காலை 6 மணிக்கு பொலிஸார் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போதே சட்டவிரோதமான முறையில் இறைச்சிக்காக பசு மாடுகளை வெட்டிய ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கழுத்து வெட்டிய நிலையில் மூன்று பசுமாடுகளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கல்முனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.