புதன், 25 ஜூலை, 2012

ஆட்கடத்தலுடன் தொடர்புடைய கூட்டமைப்பு வேட்பாளர் கைது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் திருகோணமலையில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சுரேஷ்குமார் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.