செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சிலாபம் முன்னேஸ்வரம் ஆலய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை!

எதிர்வரும் செப்டெம்பர் 2ம் திகதி வரை முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளக் கூடாதென சிலாபம் மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொலிஸார் முன்வைத்த முறைப்பாடு ஒன்றை பரிசீலித்த சிலாபம் மாவட்ட நீதிபதி ஜகத் கஹந்தகம இன்று (28) இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மிருக பலிபூஜை எதிர்வரும் 1ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதனை நிறுத்துமாறு ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
(அத தெரண - தமிழ்)