இலங்கை மற்றும் இந்திய கடற்படையினருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகிறது. இதன்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கடற்படை தலைவர் ரியர் அட்மிரல் ஆரா டயஸ் தலைமையிலான குழுவினரும், இந்திய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் எம்.பி.முரளிதரன் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெறுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளின் கடற்படையினரினதும் தொழில்சார் தகவல்களை பகிர்ந்துக் கொள்வது தொடர்பில் இதன் போது முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.