நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் சி.ஐ.டி.யினர் இதுவரையில் 110 பேரிடம் வாக்குமூலம்களைப் பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார்.
இப்பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெற்றனவா என்பது குறித்து ஆராயும் பொருட்டு சி.ஐ.டி.யினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரையில் நாடளாவிய ரீதியில் பெற்றோரிடமிருந்து 50 முறைப் பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 26ஆம் திகதி மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. இருப்பினும் பரீட்சை வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்தினமே குறிப்பிட சில மாவட்டங்களில் வெளியானதாக பரபரப்பான குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டது. இவ்விடயம் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் இது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனிடம் கேட்டுக் கொண்டார். பொலிஸ் மா அதிபர் இதற்கான விசாரணைகளை சி.ஐ.டி. யினரிடம் ஒப்படைத்ததற்கமைய தற்போது விரிவான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளுக்கு சமுகமளிக்குமாறு அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்கவிற்கு நான்கு தரம் அழைப்பு விடுத்த போதும் அவர் ஒரு தரமேனும் சமுகமளித்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையெனவும் பொலிஸ் பேச்சாளர் நேற்று கூறினார்.