நடந்து முடிந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி.பி) படுதோல்வி அடைந்துள்ளது.
மூன்று மாகாணங்களிலுமுள்ள ஏழு மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிட்ட ஜே. வி.பி. 32 ஆயிரத்து 384 வாக்குகளை மாத்திரம் பெற்று ஒரே ஒரு ஆசனத்தை வெற்றி பெற்றிருக்கின்றது.
இந்நாட்டின் மூன்றாவது பிரதான அரசியல் சக்தியாகக் கருதப்பட்ட ஜே. வி. பியை நாட்டு மக்கள் நிராகரித்து விட்டதையே இத்தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகின்றது.
மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அநுராதபுரம், கேகாலை, இரத்தினபுரி ஆகிய ஏழு மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்தேர்தலில் அநுராதபுர மாவட்டத்தில் மாத்திரம் 16 ஆயிரத்து 66 வாக்குகளைப் பெற்றே ஜே.வி.பி. ஒரு ஆசனத்தைப் பெற் றுள்ளது. ஜே. வி.பி.யின் கொள்கைகளை நாட்டு மக்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டதையே இத்தேர்தல் முடிவு காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.