புதன், 12 செப்டம்பர், 2012

எகிப்து-லிபியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்: அமெரிக்க தூதர் உட்பட 4 பேர் பலி

லிபியாவில் உள்ள பெங்காசியில் அமெரிக்க தூதரக அலுவலகம் உள்ளது. நேற்று அங்கு துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் திடீரென புகுந்தது. அவர்கள் தூதரகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். மேலும் துப்பாக்கி சூடும் நடத்தினார்கள்.

அதில் தூதரக அதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் பலி . தூதரக அலுவலகத்தையும் தீவைத்து எரித்தனர். அதில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின. 

லிபியாவை தொடர்ந்து எகிப்திலும் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு ஆவேசத்துடன் ஒரு கும்பல் புறப்பட்டு சென்றது. அங்கு தூதரகத்தின் காம்பவுண்டு சுவர் மீது ஏறி அமெரிக்க கொடியை கீழே இறக்கி அகற்றினர். பின்னர் கருப்பு கொடியை ஏற்றினர்.

அமெரிக்காவில் வாழும் எகிப்தை சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர் தயாரித்த சினிமா படத்தில் இஸ்லாம் குறித்து அவதூறு தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.