புதன், 12 செப்டம்பர், 2012

ஐ.தே.கவுக்குள் ஐக்கியமும் இல்லை; தேசியமும் இல்லை ரணிலும், சஜித்தும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய முடியாத நிலை

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று ஐக்கியமும் இல்லை. தேசியமும் இல்லை. வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இக்கட்சிக்கு சிறந்த தலைமையொன்று தேவைப்படுகிறது என ஸ்ரீல. சு. க. பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மூன்று மாகாண சபைகளிலும் போட்டியிட்ட ஐ. ம. சு. முன்னணியில் தமிழ், சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஐ. தே. கவுக்குள் தேசியமே இல்லை.  

ஐ. தே. க. வின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சரத் பொன்சேகாவுக்கும், தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் ஒரே மேடையில் ஏறி பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ பொலன்னறுவையில் தங்கியிருந்தே பிரசாரம் செய்தார். இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள வரட்சியை அரசின் மீது சுமத்தி பிரசாரம் செய்தார்களே அதுவும் பிசு பிசுத்துப் போனது.

இதுவரை காலமும் ரணிலினால் இயலாது என்றுதான் கூறிக் கொண்டிருந்தோம். இப்போது சஜித்தினாலும் இயலாது என்பதை உறுதி செய்துவிட்டார். ஐ.தே.க. வை திறமையாக வழிநடத்தக் கூடிய இளம் தலைவர் ஒருவரின் தேவை நன்று உணரப்பட்டுள்ளது. மூன்று மாகாணத்திலும் கண்ணால் பார்க்கக் கூடிய, உணரக் கூடிய அபிவி ருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கி ன்றன. ஐ. தே. க. தனது தேர்தல் பிரசாரத் தில் எதுவும் கூற முடியாத நிலையில் இருந்தது. பதிலுக்கு ஐ. ம.சு. முன்னணி மீது சேறு பூசும் வேலைகளிலேயே ஈடுபட்டிருந்தது. அவர்களிடம் ஒழுங்கான வேலைத்திட்டம் இருக்கவில்லை என்றும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.