திங்கள், 10 செப்டம்பர், 2012

தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை!

தேர்தல் நடைபெற்ற பகுதிகளிலுள்ள சகல பொலிஸ் பிரிவுகளிலும் பாதுகாப்பை  உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கேகாலை, அநுராதபுரம், மதவாச்சி பகுதிகளிலிருந்து சிறு முறைப்பாடுகள் பல கிடைத்ததாகவும் தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தமாக 97 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் தேர்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தகைய சம்பவங்களை தடுக்குமாறும் தேர்தல் விதிகளை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென ஆதரவாளர்களை அறிவுறுத்துமாறும் அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த சுமார் 20,000 பொலிஸார் மற்றும் முப்படையினர் தேர்தலின் பின்னரான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.