செவ்வாய், 11 செப்டம்பர், 2012

நடுவானில் பறந்த விமானத்தில் இருந்து தவறி விழுந்த பயணி: தெருவில் பிணமாக கிடந்தார்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஹீத்ரோ விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து ஒரு பயணிகள் ஜெட் விமானம் புறப்பட்டு சென்றது. அது சுமார் 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

அப்போது அதில் இருந்து சுமார் 30 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் கீழே தவறி விழுந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் ஹீத்ரோ விமான நிலையம் அருகே மேள்ட்லேக்கில் உள்ள போர்ட்மேன் அவென்யூவில் கார் பார்க்கிங் செய்யப்பட்ட இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

உடலில் பல இடங்களில் காயம் இருந்தது.  தகவல் அறிந்ததும், ஸ்காட்லாந்து போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த பயணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
 அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை. இவர் டிக்கெட் இன்றி கள்ளத்தனமாக பயணம் செய்து இருக்கலாம். பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டதால் தப்பிக்க விமானத்தில் இருந்து குதித்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.