புதன், 5 செப்டம்பர், 2012

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது - நீதிமன்றத்தில் ரிசாட் வழக்கறிஞர்

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியூதீன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாம் சென்று தெரிவிக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்ததாக அமைச்சருக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தது.

அந்த வழக்கு மீதான விசாரணையின் போது வழக்கறிஞர் இன்று இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.