இலங்கை படையினருக்கு தமிழ்நாடு உட்பட வெவ்வேறு மாநிலங்களில் பயிற்சிகள் வழங்கப்படுவதாக இந்திய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்துள்ளார்.
"ஆம் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு படையினருக்கு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. தமிழ் நாட்டில் வெலிங்டன் பாதுகாப்பு சேவை உத்தியோகஸ்தர்கள் கல்லூரியில் இலங்கையர் இருவருக்கு பயிற்சியளிக்கப்படுகிறது" என கேள்வியொன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்தார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெங்களூர், கன்னூர், பெல்குவாம் உட்பட இந்தியாவின் பல இடங்களகில் இலங்கையின் பாதுகாப்புப் படையினர் 450 பேருக்கும் அதிகமானோருக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களை மேற்கொள்காட்டி அவுட்லுக் இந்தியா தெரிவித்துள்ளது.
வெலிங்டன் பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சிபெறும் இலங்கையர்கள் இருவரையும் வெளியேற்றுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.