வடமத்திய மாகாணசபை வைத்தியர்களால் நாளை (03) மேற்கொள்ளவிருந்த அடையாள பணிபகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்க அதிகாரிகள், நாளை அநுராதபுர வைத்தியசாலைக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்து பின்னர் இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, அநுராதபுரம் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமத்திய மாகாணசபை வைத்தியர்கள் அடையாள பகிஸ்கரிப்பை மேற்கொள்வதாக அறிவித்திருந்தனர்.
(அத தெரண - தமிழ்)