புதன், 5 செப்டம்பர், 2012

இலங்கை பயணிகள் விவகாரத்தை இந்திய மத்திய அரசின் கவனத் திற்கு கொண்டு செல்வோம்: நியோமல் பெரேரா.

இலங்கை பயணிகள் தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்கின்றபோது தாக்குதலுக்கு உள்ளாவதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மத்திய அரசை இலங்கை கோர எதிர்பார்ப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

'இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நல்லதொரு உறவு நிலவுகிறது. அதேபோல் வெளிவிவகார அமைச்சுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் இடையிலான உறவும் வலுவாக உள்ளது.
 ராஜதந்திர மட்டத்திலல்லாமல் தொலைபேசி வாயிலாக இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தாவுடன் இவ்விடயம் தொடர்பில் உரையாடக்கூடிய நெருக்கம் நமக்கிருக்கிறது. ஆகையினால் இவ்விடயத்தினை அவர்களுக்கு நாங்கள் இலகுவாக எடுத்துக் கூறியிருக்கிறோம்..' என்று பிரதியமைச்சர் கூறினார்.

'தென்னிந்தியாவுக்கு விஜயம் செய்கின்ற பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் கேள்வி நிலவுகின்ற நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இந்திய மத்திய அரசைக் கோரவுள்ளோம்' என்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா மேலும் தெரிவித்தார். (டியான் சில்வா)