இலங்கையின் முப்படைகளின் கூட்டுப் பயிற்சி எதிர் வரும் 9ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை தொப்பிகல- வாகரை பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.
மூன்றாவது முறையாக இலங்கையில் நடைபெறவுள்ள இந்த கூட்டுப் பயிற்சிகளில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளைச் சேர்ந்த 2200 முப்படை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக இராணுவத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்தார்.
இலங்கையின் முப்படையினருக்கு மேலதிகமாக பாகிஸ்தான்- பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட இராணுவக் குழுக்கள்

இந்த கூட்டுப் பயிற்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதுடன் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, ஜப்பான், ஈரான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் தூதரகங்களின் இலங்கைக்கான பாதுகாப்பு இணைப்பதிகாரிகள் மேற்பார்வை யாளர்களாக கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள முப்படைகளின் கூட்டுப் பயிற்சி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றது.
விமானப் படையின் வான் நடவடிக்கைகள் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் புலத்சிங்கள கடற்படையின் கடல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் கெப்டன் பிரசன்ன மஹவித்தாரன இராணுவத்தின் நடவடிக்கைகள் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் குலதுங்க இராணுவத்தின் பயிற்சிப் பணிப்பாளர் பிரிகேடியர் ரெல்ப் நுகேரா கொமாண்டோ படைப் பிரிவின் விசேட நடவடிக்கைகள் கட்டளை அதிகாரி கேர்ணல் சுஜீவ செனரத் யாப்பா ஆகியோர் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.