செவ்வாய், 11 செப்டம்பர், 2012

கொழும்பில் இருந்து கண்டிக்கு ஹெரோயின் கடத்திய பெண் கைது

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் வசம் இருந்து 13 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கொழும்பில் இருந்து கண்டிக்கு ஹெரோயின் கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுகிறார்