புதன், 12 செப்டம்பர், 2012

பாதுகாப்பு அமைச்சில் இந்திய பாதுகாப்புக் கல்லூரிக் குழுவினர்!

மேஜர் ஜெனரல் அநுராஜ் குப்தா தலைமையிலான பதினைந்து அங்கத்தவர்களைக் கொண்ட இந்திய பாதுகாப்புக் கல்லூரிக் குழுவினர்- பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர்  கோடாபய ராஜபக்ஷவை நேற்று  பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.

15 அங்கத்தவர்களைக் கொண்ட இக் குழுவினர் கல்லூரியின் 52 ஆவது அயல் நாட்டுச் சுற்றுலாவுக்கமைய கடந்த வாரம் இலங்கைக்கு வந்தனர். மேலும் இக் குழுவில் அவுஸ்திரேலியா- இந்தியா- நேபாளம்- சவுதி அரேபியா மற்றும் உகன்டாவைச் சேர்ந்த அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளனர்.

இச் சுற்றுலாவின் போது இக்குழுவினர் இந்திய அமைதிகாக்கும் படையின் நினைவகம்- இலங்கை யுத்தவீரர்களின் நினைவகம்- வெளிவிவகார அமைச்சு- பூந்தோட்டம் நலன்புரி முகாம்- அனுராதபுரத்தில் உள்ள மதவழிபாட்டுத் தளங்கள் மற்றும் இராணுவ முக்கியதுவம் வாய்ந்த இடங்களையும் சென்று பார்வையிடவுள்ளனர்.

இச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துறையாடப்பட்டதுடன் பாதுகாப்புச் செயலாளரும் மேஜர் ஜெனரல் அநுராஜ் குப்தாவும் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.(எம்.ரி.-977)

gothabaya-R-2