தன் மீதான பிடி ஆணை உத்தரவை ரத்து செய்யக்கோரி அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திருநாவுக்கரசு என்பவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் மீது கொலைக் குற்றம், சட்டவிரோதமாக ஆயுதங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த டக்ளஸ் தேவானந்தா பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். 1990ம் ஆண்டு வரை வழக்கு விசாரணையின் போது நேரில் ஆஜராகி வந்த இவர் பின்னர் இலங்கைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு இங்கு நடைபெற்ற விசாரணைகளில் ஆஜராகாததைத் தொடர்ந்து அவருக்கு எதிரான பிடி ஆணை உத்தரவை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, இலங்கையின் பாரம்பரிய தொழில்கள் துறையின் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், தன் மீதான பிடியாணை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை நான்வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனக்கு எதிராக இந்திய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தனக்கு தெரியாது என்றும், அரசு முறைப்பயணமாக இந்தியா வந்தபோதுதான் அது பற்றி தெரிய வந்ததாகவும், தற்போதைய சூழ்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரானால் தனக்கு எதிராக வன்முறை சம்பவம் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.
இந்த சூழ்நியை கருத்தில் கொண்டு தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும், தன் மீதான பிடி ஆணை உத்தரவை ரத்து செய்தும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு, 4வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எஸ். ராஜகோபாலன் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.