கொட்டகலை பிரதேசத்திலிருந்து நாவலப்பிட்டியவுக்கு அனுமதி பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட 20 ஆடுகளைப் பத்தனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பத்தனை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றினைத் தொடர்ந்து நேற்று 4ஆம் திகதி இரவு 8 மணியளவில் திம்புள்ள பாடசாலைக்கு அருகில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பத்தனை பொலிஸார் வான் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 20 ஆடுகளையும் வானையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஆடுகளை ஏற்றிச் சென்ற சந்தேக நபர்கள் இருவரையும் பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அனுமதி பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட ஆடுகளின் பெறுமதி 2 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட ஆடுகளையும் வானையும் தடுத்து வைத்துள்ள பத்தனை பொலிஸார் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.