பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில், தேரா காசிகான் பகுதியில், பெரிய அணு சக்தி நிலையங்கள் உள்ளன. இந்த அணு சக்தி நிலையங்கள் மீது, தலிபான் அமைப்பின், தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக, உளவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தலிபான் அமைப்பைச் சேர்ந்த, பயங்கரவாதிகளின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டபோது, இந்த சதி அம்பலமானதாக, ஐ.எஸ்.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணு நிலையங்களுக்கு, முழு பாதுகாப்பு வழங்குமாறு, ராணுவம் மற்றும் அணு சக்தி கமிஷன் உள்ளிட்ட துறைகளில் இருந்து, உத்தரவு வந்துள்ளதாக, அவர் தெரிவித்தார். எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்பதால், பஞ்சாப் மாகாணம் மற்றும் பலூசிஸ்தான் எல்லைப் பகுதிகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.