வியாழன், 12 டிசம்பர், 2013

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு ஆஸ்திரேலியாவில் தடை

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு ஆஸ்திரேலியாவில் தடைஆஸ்திரேலியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒன்று கூடி ஆண்டு தோறும் பேரணி நடந்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவின் தலைநகர பிரதேசமான கான்பெர்ரா சட்டசபையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்வதற்கான மசோதா நிறைவேறியது.

இதையடுத்து இப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு ஆண் மற்ற எந்த ஒரு ஆணையோ, அல்லது ஒரு பெண் மற்ற எந்த ஒரு பெண்ணையோ சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளலாம் என அனுமதியளித்தது.  இதையடுத்து அங்கு 27 ஓரினச்சேர்க்கை ஜோடிகள் திருமணம் செய்துகொண்டன.

ஆனால், இந்த பிராந்திய சட்டமானது ஆஸ்திரேலியாவின் கூட்டாட்சி சட்டத்திற்கு எதிராக உள்ளது என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம், ஆஸ்திரேலிய தலைநகர பிரதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு எதிராக எம்.பி.க்கள் வாக்களித்துள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், சமீபத்தில் திருமணம் செய்த அந்த 27 ஓரினச்சேர்க்கை ஜோடிகளின் திருமணம் ரத்தாகிறது.