ஸ்ரீ
லங்கா சுதந்திரக்கட்சிலிருந்து வெளியேறி புதியதொரு கட்சியை மஹிந்த
ஆரம்பிப்பார் என பரவலாக எதிர்ப்பார்க் கப்பட்டு வரும் நிலையில்,
சுதந்திரக்கட்சிலிருந்து நான் ஒருபோதும் வெளியேறமாட்டேன் என்று முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்தார்.
தலதா மாளிகையில் இன்று காலை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர்த இதனைத் தெரிவித்தார்.
எனது பாதுகாப்பு தலைமை அதிகாரியாக இருந்தவரின் வீட்டில் தேடுதல்
நடத்தப் பட்டுள்ளது. தங்கம் இருப்பதாக கூறினார்கள், இறுதியில் ஒரு சொப்பின்
பையொன்றை தான் மீட்க முடிந்துள்ளது.
ஆனால், அங்கிருந்த கல்லறையொன்றும் தோண்டப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய
விடயமாகும். நான் எங்கு சென்றாலும் அந்த இடத்தை தோண்டுவது வழமையாகியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலமாக்கியவன் நான். உறுப்பினர்களின்
எண்ணிக்கையை அதிகரித்த பெருமையும் என்னையே சாரும்.
எனவே, கட்சிலிருந்து
வெளியேறும் எண்ணம் இல்லை. புதிய கட்சி உருவாக வேண்டும் என்பது மக்களின்
விரும்பமாக இருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. வெளிநாட்டு ஒதுக்கீடுகள்
குறைந்துள்ளன. இந்நிலையில் நாட்டு மக்களை திசை திருப்புவதற்காகவே கைதுகள்
இடம்பெறுகின்றன.

