வியாழன், 18 பிப்ரவரி, 2016

நம் ஆட்சி காலத்தில் மக்களை வீதியில் இறங்கிவிட்டு அபிவிருத்திகளை மேற் கொள்ளவில்லை - மஹிந்த

நல்லாட்சி அரசாங்கம் கடுகளவேனும் அபிவிருத்தியை மேற் கொள்ளவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
 
இன்று (18) பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிக்க வந்த வேளை, ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 தனது ஆட்சிக் காலத்தில் நுரைச்சோலை மூன்று கட்ட மின் உற்பத்தி, அதிவேக வீதி, துறைமுகம், விமான நிலையம் போன்றவற்றை நிர்மாணிக்க செலவான மில்லியன் அளவிலான பணத் தொகை, இந்த அரசாங்கத்தால் நுகர்வுக்காக மட்டுமே செலவிடப்ப ட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 
 
இந்த ஆட்சியில் தொலைக்காட்சிகள் மூடப்பட்டுள்ளதாகவும், எதிரணிக்கு ஏசும் தொலைக் காட்சிகள் மட்டுமே உள்ளதாகவும், குரல் கொடுக்கும் பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வேலை கோருபவர்களுக்கு கண்ணீர் புகை வீசுவதாகவும், அபிவிருத்தி என்ற போர்வையில் கொழும்பு மக்களை வெளியே இழுத்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
தனது காலத்தில் மக்களை வீதியில் இறங்கிவிட்டு அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை எனவும், மற்றும் எந்த வகையிலேனும் என்னையும் எனது குடும்பத்தையும் குற்றவாளியாக்கி   தண்டிக்கும்  நோக்கம் மட்டுமே நல்லாட்சிகாரர்களுக்கு உள்ளது.

அந்த நோக்கத்தை நிறைவேற்ற என்னையும் புலிகளுடன் ஒப்பிட்டு பொய்யான ஆதாரங்களை வெளியிடக்கூட முயற்சிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எந்தவித ஆதாரமும் இல்லாது என்னையும் எனது குடும்பத்தையும் சிறையில் அடைக்கும் பலமான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பாரிய குற்றங்கள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் அளித்துவிட்டு நிலையில் அதன் பின்னர் கருத்து தெரிவிக் கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.