நல்லாட்சியில் ஈடுபடுவர்களுக்கும் பிள்ளைகள் உண்டு.
அவர்களின் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை
பொறுத்திருந்து பாருங்கள் என நாமல் ராஜபக்ஷ தற்போதைய ஆட்சியாளர்களுக்கு
எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ
உள்ளிட்ட ஐவருக்கு 2 ஆவது முறையாகவும் பிணை வழங்க மறுத்த கடுவலை
நீதிவான் தம்மிக ஹேமபால, அனைவரையும் எதிர்வரும் மார்ச் 10 ஆம்
திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நேற்று உத்தரவு
பிறப்பித்தார்.
இந்த பிணை மறுப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எமது குடும்பத்தை பழிவாங்கும் நோக்கிலேயே திட்டம் தீட்டி பிணை
மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி குற்றப்பு புலனாய்வு பிரிவினரும் உடந்தை.
1989-90 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ; இவ்வாறே எங்கள் கிராமங்கள் மீது
குண்டுகளை விசி தாக்குதல் நடத்தி தமது எதிர்ப்பை காட்டினர் . ஆனால் இன்று
பொது சொத்துக்களை ஆவணங்களாக வைத்து கொண்டு தமக்கெதிராக செயற்படுகின்றனர்.