புதன், 16 மார்ச், 2016

வடமராட்சி நீர் பிரச்சினை தொடர்பில் 2016. 03. 13ம் திகதி 'தமிழ்த் தந்தி' கட்டுரையிலிருந்து

2012, 2013ம் வருட காலகட்டங்கள் வடமராட்சிப் பகுதியில் நீருக்கு மிகவும் கஸ்ட நிலை ஏற்பட்டக் காலமாகக் கூறப்படுகின்றது.
 
இப் பிரச்சினையானது தீராத பிரச்சினையாக இருக்கக் கூடாது என்பதால் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் இரணைமடு நீர் வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
 
அந்த நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில், வடமராட்சி மக்களுக்கு தீர்வொன்று இருக்கக் கூடிய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூண்டுதலால் இரணைமடு விவசாயிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில், இரணைமடு குளம் அதனது வரலாற்றில் ஒரேயொரு முறையே வற்றியிருக்கிறது. அதுபோக அக் குளம் தனது வரலாற்றில் வற்றியதே இல்லை.
 
அதனது நீர் மழைக் காலங்களில் வீணாக கடலுக்கே அனுப்பப்படுகிறது.
 
மேலும், இரணைமடு நீர் வழங்கல் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
 
அந்த நிதிக்கு அரசு வட்டியைக் கட்டிக்கொண்டு வருகிறது.
 
அந்த நிதியைப் பயன்படுத்தாவிட்டால் திரும்பிப் போய்விடும்.
 
எனவே, அந்த நிதியைப் பாவித்து இத் திட்டத்தை முன்னெடுப்போமென டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறினார்.
 
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து இத் திட்டத்திற்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றனர்.
 
(சிங்களக் கட்டுரையொன்றின் மொழிபெயர்ப்பில் இருந்து)