வெள்ளி, 11 மார்ச், 2016

கண்டி, நாவலப்பிட்டி, கலஹா, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை: அப்பிரதேச மக்கள் விசனம்

ஜனவசமை முகாமையின் கீழ் இயங்கும் கண்டி நாவலப்பிட்டிய கலஹா தெல்தோட்டை ஹேவாஹெட்டை ஆகிய பிரதேசங்களிலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கான இம்மாத கொடுப்பனவு இன்று 11 ஆம் திகதி பிற்பகல் வரை வழங்கப்படவில்லை. இதனால் அப்பிரதேச தோட்ட தொழி லாளர்கள் கடும் விசனத்தை தெரிவித்துள்ளனர்.

ஜனவசமை முகாமைக்கு சொந்தமான இப்பிரதேச தோட்ட தொழிலாளர்கள் தாம் தொழில் ரீதியாக பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த மாதங்களின் தொழிலாளர் களுக்கு குறுகிய நாட்களே வேலை வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த நாள் வேலை செய்த சம்பளத்தை கூட உரிய திகதியில் பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஜனவசமை தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தொழிற்சங்கங்கள் பிரதிநிதிகளுக்கு  முறையிட்டும் எந்தவித தீர்வும் எட்டபடாத நிலை காணப்படுவதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் வழமையாக 10 ஆம் திகதி வழங்கப்பட்டு வந்த மாதாந்த சம்பளம் கூட கடந்த பல மாதமாக உரிய திகதிக்குள் வழங்கப்படாத நிலையில் பெப்ரவரி மாதத்திற்கான சம்பளமும் இன்று பிற்பகல் வரை வழங்கப்படவில்லை.