சனி, 12 மார்ச், 2016

எம்பிலிப்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு; பெண்ணொருவர் உயிரிழப்பு

எம்பிலிப்பிட்டிய செவனகல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந் துள்ளதுடன் பெண்ணின் கணவர் காயமடைந்துள்ளார். 
 
இன்று காலை (11) செவனகல, 700 பிரிவு வீடொன்றுக்கு வருகை தந்த நபர்கள் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
 
உயிரிழந்திருப்பது 49 வயதுடைய பெண்ணொருவர் என்பதுடன் படு காயமடைந்த அவரது கணவர் செவனகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.