புதன், 16 மார்ச், 2016

மாணவர் பேரணி மீது கண்ணீர்ப் புகை, நீர்த்தாரைப் பிரயோகம்.(வீடியோ இணைப்பு)

பொலிஸாரின் ஆணையை மீறி, ஜனாதிபதி மாளிகை நோக்கிச் செல்ல முற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது சற்று முன்னர் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. 
 
கோட்டை - செரமிக் சந்திப் பகுதியில் வைத்து இந்த நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, களனிப் பல்கலைக் கழகத்தில் இருந்து கொழும்பு நோக்கி, இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.