வியாழன், 17 மார்ச், 2016

வேறு எந்த நாட்டிலும் இல்லாத பாராளுமன்றம் தற்போது இலங்கையில் உள்ளது! சோமவங்ச அமரசிங்க

வேறு எந்த நாட்டிலும் இல்லாத பாராளுமன்றம் இலங்கையில் உள்ளதாகவும், தோல்வியடைந்த வேட்பாளர்கள் 14 பேர் அங்குள்ளதாகவும் மக்கள் சேவைக் கட்சியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். 
 
இதிலிருந்து மைத்திரி - ரணிலின் ஜனநாயகத்தை புரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
நாட்டை பிரிப்பதற்கும் விற்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 எதிரணியினர் இன்று மேற்கொண்டுவரும் "மக்கள் போராட்டம்" என்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சோமவங்ச அமரசிங்க மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.