இந்தியாவுடன் கையொப்பமிடப்பட உள்ள உத்தேச உடன்படிக்கை உண்மையானால் அது நாட்டுக்கு பாதகமானதாகும் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட முன்னர் தற்போது இருக்கின்ற வர்த்தக மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை ஆய்வு செய்து தேசிய பாதுகாப்பிற்காக தேசிய கொள்கை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
எட்கா உடன்படிக்கையை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் நேற்று கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் இவ்வாறு கூறியிருந்தனர்.
வௌிப்படையற்ற இருதரப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது நாட்டிற்கு ஆபத்தானது என்று இங்கு கருத்து வௌியிட்ட கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறினார்.

