புதன், 9 மார்ச், 2016

ஆஸி.யில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் கட்டுநாயக்கவில் வைத்து கைது

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கை பிரஜை ஒருவர் நாடுகடத்தப்பட்ட நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப் பட்டுள்ளார். 
 
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், சந்தேகநபர் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இவரை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.