முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார தூங்கவுக்கு, 1996ம் ஆண்டு குண்டு தாக்குதலுக்கு முகம் கொடுத்த பின்னர், தலை குழம்பிப் போயுள்ளதாக பாராளு மன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குண்டின் துகள்கள் இன்னும் அவரது தலையில் இருப்ப தாகவும் இதனால், சுகயீனம் காரணமாக நினைத்ததை எல்லாம் பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவர்களைப் போன்றவர்களுக்கு கௌரவத்தை வழங்கி ஒதுக்கி வைத்து விட வேண்டும் எனவும் கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கடந்த 17ம் திகதி நடத்திய பேரணிக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அல்லாத திருடர்கள் வந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில மேடைகளில் தெரிவித்துள்ளதாகவும், கூட்டத்திற்கு வந்தவர்கள் திருடர்கள் என்றால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால், அப்படியான கூட்டத்தை நடத்தி காட்டுமாறு சவால் விடுக்கின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த பேரணியில் தான் தடுக்கி விழுந்தது தொடர்பில் அனைவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனவும், தன்னை திரையில் காட்டாத தொலைக்காட்சிகள் கூட தான் தடுக்கி விழுந்ததை ஒளிப்பரப்பியது, எனவே விழுந்து, விழுந்து எழும் பெருமை தனக்கு இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

